இப்படிச் சொன்னால் இருவருக்கும் நல்லது

Posted By: Admin, 30 Nov -0001.

ஒருவர் ஜாதகம் பார்க்கப் போனார். அப்பொழுது மற்றொரு நண்பர் அவரிடம் சொன்னார். ‘‘இதோ பாருங்கள், நீங்கள் ஏதோ கஷ்ட காலத்தில் ஜாதகம் பார்க்கப் போகிறீர்கள். அவர் உங்களுக்குச் சாதகமாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளுங்கள். பாதகமாகச் சொன்னால் தூக்கிப் போட்டுவிட்டு வாருங்கள். பிறகு அதையே நினைத்து குழப்பிக் கொள்ள வேண்டாம்” அவர் சொன்னது ஒரு விதத்தில் சரி. பலர் ஜாதகம் பார்த்த பிறகு இன்னும் குழம்பிப் போய் விடுகிறார்கள். “நமக்கு விடிவுகாலமே இல்லையோ” என்று நினைக்கிறார்கள். இதில் ஒரே ஒரு சின்ன திருத்தம்.ஜாதகம் பார்க்கப் போகிற உங்களுக்கு, பதில் சாதகமாக வந்தாலும், ...