தசமஹா வித்யாவை வணங்குவோம்!

Posted By: Admin, 30 Nov -0001.

தசமஹாவித்யா” என்று போற்றப்படும் பத்து மஹா தேவியரும் ஆதிபராசக்தியான, அம்பாளின் அம்சங்களே ஆவர். காளி, தாரா, ஷோடசி, புவனேஸ்வரி, திரிபுரபைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலாத்மிகா என்னும் பெயர்க்கொண்ட இந்த பத்து மஹாதேவியரையும் நவராத்திரி சமயம் பூஜிப்பது மிகுந்த விசேஷமாகும். அதுமட்டுமல்லாமல், தேவியர்களின் மந்திரங்களை சொல்லி நவராத்திரியை பூஜிப்பது சிறந்ததாகும். காளி: கரிய நீலநிறம் கொண்டவள். வேதத்தில், அதர்வண வேதத்தை குறிப்பவள். மயானத்தில் உறைபவள். வெட்டுண்ட உடல்களை ஆடையாக அணிபவள். அடிமேல் அடி எடுத்து மிக மெதுவாகவும், ஆக்ரோஷமாகவும் ...