Sabarimala E-Pass: சபரிமலை ஐயப்ப தரிசனம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி? - 30,000 பக்தர்கள் அனுமதிக்க வாய்ப்பு

Posted By: Admin, 30 Nov -0001.

கார்த்திகை மாதம் தொடங்க உள்ள நிலையில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்யும் வகையில் பக்தர்கள் வசதிக்காக ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என சபரிமலை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.கொரொனா பெருந்தொற்று காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் செய்ய கட்டாயமாக இணையவழியில் பக்தர்கள் தரிசனத்திற்காக முன்பதிவு டிக்கெட் புக் செய்ய வேண்டியது அவசியம் எனவும், 48 மணி நேரத்துக்கு முன் கோவிட் -19 (RTPCR) டெஸ்ட் எடுத்து நோய் தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வரவேண்டும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.