நவராத்திரி 2021 ராசிபலன் - 12 ராசியினர் அன்னையின் அருள் பெற எப்படி பூஜிக்க வேண்டும்?

Posted By: Admin, 30 Nov -0001.

நவராத்திரி தொடக்கம் :இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இந்தாண்டு நவராத்திரி பண்டிகை இன்று அக்டோபர் 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி முடிவடைகிறது. நவராத்திரியின் போது தேவியின் 9 வடிவங்கள் வழிபடுவது வழக்கம். தேவியின் எல்லையற்ற அருளைப் பெற, ஒவ்வொரு நாளும் அன்னையை சிறப்பு அலங்காரமும், பிரசாதங்களைப் படைத்து வழிபடுவது நல்லது.அதே போல் 12 ராசியினர் சிறப்பான பலனைப் பெற எப்படி வழிபட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.